ஐ.எம்.எப்., முடிவுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதிருப்தி
ஐ.எம்.எப்., முடிவுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதிருப்தி
ஐ.எம்.எப்., முடிவுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதிருப்தி

ஸ்ரீநகர்: பாகிஸ்தானுக்கு நிதி வழங்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முடிவுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள பாகிஸ்தான், ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியத்திடம், 1 பில்லியன் டாலர் கடன் கேட்டிருந்தது. ஆனால், ஐ.எம்.எப்., வழங்கும் நிதியை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் பயன்படுத்துவதாக, இந்தியா குற்றஞ்சாட்டி, அதற்கான ஓட்டெடுப்பை புறக்கணித்தது.
இருப்பினும், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடன் கொடுக்க ஐ.எம்.எப்., சம்மதம் தெரிவித்ததாக, பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இது இந்தியாவை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இந்த நிலையில், சர்வதேச நிதியத்தின் இந்த முடிவுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில், 'துணைக் கண்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் பதற்றத்தை குறைக்க முடியும் என சர்வதேச சமூகம் எப்படி நம்புகிறது என்று எனக்கு புரியவில்லை. ஏனென்றால், சர்வதேச நாணய நிதியம் வழங்கும் பணத்தை, பூஞ்ச், ரஜோரி, ஊரி உள்ளிட்ட இந்திய பகுதிகளை அழிக்கவே பாகிஸ்தான் பயன்படுத்துகிறது,' எனக் குறிப்பிட்டுள்ளார்.
போர் நிறுத்தம்
இதற்கிடையே, இரு நாடுகளும், இன்று மே 10ம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.