'அமைதியை நிலைநாட்ட நமது வீரர்கள் உறுதி": ராஜ்நாத் சிங்
'அமைதியை நிலைநாட்ட நமது வீரர்கள் உறுதி": ராஜ்நாத் சிங்
'அமைதியை நிலைநாட்ட நமது வீரர்கள் உறுதி": ராஜ்நாத் சிங்
UPDATED : ஜூலை 09, 2024 12:12 PM
ADDED : ஜூலை 09, 2024 11:59 AM

புதுடில்லி: அமைதியை நிலைநாட்ட நமது வீரர்கள் உறுதியாக உள்ளனர் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஷ்மீரில் கதுவா மாவட்டத்தின் பாத்நோட்டா கிராமம் அருகே பயங்கரவாத தாக்குதலில் நமது வீரம் மிக்க இந்திய ராணுவ வீரர்கள் ஐந்து பேரை இழந்ததற்காக நான் மிகவும் வேதனைப்படுகிறேன். இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
அமைதி
இந்த கடினமான நேரத்தில் தேசம் அவர்களுடன் உறுதியாக நிற்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. அமைதியை நிலைநாட்ட நமது வீரர்கள் உறுதியாக உள்ளனர். இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.