ஆசிரியருக்கு சுற்றுப்புற சூழல் கல்வி சிறப்பு பயிற்சி
ஆசிரியருக்கு சுற்றுப்புற சூழல் கல்வி சிறப்பு பயிற்சி
UPDATED : செப் 24, 2015 12:00 AM
ADDED : செப் 24, 2015 10:40 AM
அ நிறம் | அளவு
கோத்தகிரி
: நீலகிரி மாவட்டத்தில் இயங்கிவரும் அரசு
துவக்கபள்ளி ஆசிரியர்களுக்கான, சுற்றுப்புற சூழல்
கல்வி, பூஜ்ஜிய கழிவு அணுகுமுறை குறித்த மாவட்ட
கருத்தாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி, கோத்தகிரி மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி
நிறுவனத்தில் (டயட்) நடந்தது.
நிறுவன முதல்வர் தேவராஜ் தலைமை வகித்து, பயிற்சியை துவக்கி வைத்தார். முதன்மை கருத்தாளர்களாக, பயிலக விரிவுரையாளர் வசந்தாமணி, கேர்கம்பை அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ஆனந்தன் மற்றும் அரவேனு உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஜெனிஸ்குமார் ஆகியோர், பயிற்சி அளித்தனர். இதில், விரிவுரையாளர்கள், ஆசிரியர், ஆசிரியைகள் பயிற்சி பெற்றனர்.
