ADDED : ஜூலை 17, 2024 12:28 AM
அரியாங்குப்பம் : பைக்கில் சென்ற தனியார் கம்பெனி ஊழியரை வழிமறித்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் விக்னேஷ், 23; தனியார் கம்பெனி ஊழியர். இவர் நேற்று முன்தினம் பூரணாங்குப்பம் அரசு பள்ளி வழியாக தனது நண்பர்களுடன் பைக்கில் சென்றார். அங்கு நின்றிருந்த மூன்று பேர், விக்னேைஷ வழிமறித்து, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவாக இருக்கும் தவளகுப்பம் பகுதியைச் சேர்ந்த தர்மா, அரிஷ், வெங்கடேஷ் ஆகியோரை தேடிவருகின்றனர்.