/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வருமான வரிப்பிடித்தம் விழிப்புணர்வு கருத்தரங்கம் வருமான வரிப்பிடித்தம் விழிப்புணர்வு கருத்தரங்கம்
வருமான வரிப்பிடித்தம் விழிப்புணர்வு கருத்தரங்கம்
வருமான வரிப்பிடித்தம் விழிப்புணர்வு கருத்தரங்கம்
வருமான வரிப்பிடித்தம் விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : ஜூலை 17, 2024 12:39 AM

புதுச்சேரி, : விழுப்புரத்தில், மாவட்ட கருவூல அலுவலகங்களின் கீழ் வரும் வரிப்பிடித்தம் செய்யும் அலுவலர்களுக்கான வருமானவரி பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
சென்னை வருமானவரி துறை தலைமை ஆணையர் ராஜசேகர ரெட்டி அறிவுறுத்தலின் பேரில், சென்னை கருவூல ஆணையரகம் மூலம் அனைத்து மாவட்ட கருவூல அலுவலகங்களின் கீழ் வரும் அனைவருக்கும் வருமான வரி பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னை (வரி பிடித்தம்) ஆணையர் முரளி மற்றும் கூடுதல் ஆணையர் அர்ஜூன் மாணிக் ஆணையின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வரிப்பிடித்தம் செய்யும் அலுவலர்களுக்கான, வருமான வரிப்பிடித்தம் குறித்த கருத்தரங்கம் விழுப்புரம் சட்டக் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
கருத்தரங்கிற்கு மாவட்ட கருவூல அலுவலர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி வரவேற்றார். அரசு சட்டக் கல்லுாரி முதல்வர் கிருஷ்ண லீலா சிறப்புரையாற்றினார்.
வருமான வரி அலுவலர்கள் செங்குட்டுவன், செந்தில்குமார், ராஜா ராமன், தீபன்குமார் ஆகியோர் வருமான வரிப்பிடித்தம் குறித்த பல்வேறு விதிகளின் அடிப்படையில் முறையாக வரிப்பிடித்தம் செய்வது எப்படி, வரிப்பிடித்தம் செய்பவர்களின் கடமைகள் மற்றும் அவர்களின் பொறுப்புகள், வரி பிடித்த விதிகளை முறையாக பின்பற்றவில்லை என்றால் எழும் சிக்கல்கள் குறித்து விளக்கினர்.
வருமானவரி ஆய்வாளர் சிற்றரசன், உதவியாளர் தயாநிதி ஆகியோர் 'வருமானவரி தடயங்கள்' தளம் குறித்து விளக்கினர்.
தொடர்ந்து, வரி பிடித்தம் குறித்த துண்டு பிரசுரம் மற்றும் கையேடுகள் வழங்கப்பட்டன.
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட 'டிடிஎஸ்' நண்பன் என்ற ஜாட்போட் பிளேஸ்டோர் மூலமாக பயன்பாட்டில் உள்ளதை விளக்கினர். கருத்தரங்கில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.