/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பைக்குகள் மீது லாரி மோதல் மாணவர் பலி: 3 பேர் படுகாயம் பைக்குகள் மீது லாரி மோதல் மாணவர் பலி: 3 பேர் படுகாயம்
பைக்குகள் மீது லாரி மோதல் மாணவர் பலி: 3 பேர் படுகாயம்
பைக்குகள் மீது லாரி மோதல் மாணவர் பலி: 3 பேர் படுகாயம்
பைக்குகள் மீது லாரி மோதல் மாணவர் பலி: 3 பேர் படுகாயம்
ADDED : ஜூலை 17, 2024 12:50 AM
மயிலம் : இரு பைக்குகள் மீது டிப்பர் லாரி மோதியதில் மாணவர் இறந்தார். 3 பேர் காயமடைந்தனர்.
மயிலம் அடுத்த மேட்டுநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் பிரேம்குமார்,15; வெளியனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் எட்வின் மகன் சாம்சங்,15; திண்டிவனத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இருவரும் நேற்று மாலை பள்ளி முடிந்து, நடந்த சிறப்பு வகுப்பில் பங்கேற்று இரவு வீடு திரும்பினர்.
அப்போது, கூட்டேரிப்பட்டில் இருந்து மயிலம் நோக்கி வந்த இரு பைக்குகளில் லிப்ட் கேட்டு இருவரும் வந்தனர். 8:15 மணிக்கு எடப்பாளையம் கிராமம் அருகே வந்தபோது, எதிரே வந்த டிப்பர் லாரி 2 பைக்குகள் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் பிரேம்குமார் சம்பவ இடத்திலயே இறந்தார். படுகாயமடைந்த சாம்சங் மற்றும் 2 பைக்குகளையும் ஓட்டி வந்தவர்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்து மயிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.