/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாரதி ஆங்கிலப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை பாரதி ஆங்கிலப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
பாரதி ஆங்கிலப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
பாரதி ஆங்கிலப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
பாரதி ஆங்கிலப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
ADDED : மே 20, 2025 08:01 AM

திருக்கனுார் : சோரப்பட்டு, பாரதி ஆங்கில உயர்நிலைப்பள்ளி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் நிர்வாகி சம்பத், தலைமை ஆசிரியர் சுசீலா சம்பத், நிர்வாக இயக்குநர் ஹரிஷ்குமார் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பள்ளியின் நிர்வாகி சம்பத், தலைமை ஆசிரியர் சுசீலா சம்பத் கூறியதாவது:
பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 51 மாணவர்களும், உயர் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், கொம்யூன்கள் அளவில் முதன்மை மதிப்பெண் பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.
பள்ளி அளவில் ஹரிஷ் 489 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், மாணவி வித்யாஸ்ரீ 486 பெற்று இரண்டாம் இடமும், பரணிதரன், கொடிமலர் 479 பெற்று மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். தேர்வில், 475 மதிப்பெண்களுக்கு மேல் 8 பேரும், 450க்கு மேல் 17 பேரும், 400க்கு மேல் 31 பேரும் பெற்றுள்ளனர்.
பாடவாரியாக தமிழில் 98 மதிப்பெண் 2 பேரும், ஆங்கிலம் 99 மதிப்பெண் 5 பேரும், கணிதத்தில் 99 மதிப்பெண் ஒருவரும், அறிவியலில் 96 மதிப்பெண் 7 பேரும், சமூக அறிவியலில் 10 பேர் 100க்கு 100 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளி 37 ஆண்டுகளாக நகர்புற பள்ளிகளுக்கு இணையாக அடிப்படை வசதிகளை செய்து, கிராமப்புற மாணவர்களை கல்வி வளர்ச்சியில் முன்னேற்றி வருகிறது. பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 8ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ., (NCERT) பாடத்திட்டம் பின்பற்றபடுகிறது என்றனர்.