Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வங்கி கடனில் நுாதன மோசடி பர்னிச்சர் கடைக்காரர் சிக்கினார்

 வங்கி கடனில் நுாதன மோசடி பர்னிச்சர் கடைக்காரர் சிக்கினார்

 வங்கி கடனில் நுாதன மோசடி பர்னிச்சர் கடைக்காரர் சிக்கினார்

 வங்கி கடனில் நுாதன மோசடி பர்னிச்சர் கடைக்காரர் சிக்கினார்

ADDED : டிச 01, 2025 01:24 AM


Google News
Latest Tamil News
ஆவடி: வீட்டு உபயோக பொருட்களுக்கு, வங்கி தரப்பில் கொடுக்கப்பட்ட கடன் தொகையில் மோசடியில் ஈடுபட்ட பர்னிச்சர் கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

ஆவடி அடுத்த கவரப்பாளையம், சிரஞ்சீவி நகரைச் சேர்ந்தவர் இளவரசன், 30; ஆவடியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.

இவரது கடையில், 'கோடாக் மஹிந்திரா' தனியார் வங்கி மூலம் தவணை முறையிலும், வாடிக்கையாளர்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்து வந்தார். கடந்த ஆறு மாதமாக, வாடிக்கையாளர்கள் சிலர் வாங்கிய பொருட்களுக்கு மாத தவணை கட்டவில்லை. இதையடுத்து, வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் பொருட்களை பறிமுதல் செய்ய சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் பொருட்கள் எதுவும் வாங்கவில்லை என்பது தெரிய வந்தது.

அதாவது, வாடிக்கையாளர்கள் இளவரசனின் கடையில் வாங்கும் பொருட்களுக்கு, வங்கி முழு தொகையும் செலுத்தி வருகிறது. அந்த தொகையை இளவரசன் மற்றும் வங்கி ஏஜன்ட் கிருத்திகா ஆகியோர், பொருட்கள் வழங்காமலேயே, பணம் தேவைப்படுவோருக்கு கொடுத்து 'கமிஷன்' பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அந்தவகையில், 18 வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்கியதாக கணக்கு காட்டிய இளவரசன், 13.55 லட்சம் ரூபாய் கொடுத்து 'கமிஷன்' பெற்றுள்ளார்.

வங்கி மேலாளர் நிர்மல் குமார், 28 அளித்த புகாரை அடுத்து, ஆவடி போலீசார் இளவரசனை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us