Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'அய்யாவின் போதனைகள் சமுதாயத்தில் பரவ வேண்டும்'

 'அய்யாவின் போதனைகள் சமுதாயத்தில் பரவ வேண்டும்'

 'அய்யாவின் போதனைகள் சமுதாயத்தில் பரவ வேண்டும்'

 'அய்யாவின் போதனைகள் சமுதாயத்தில் பரவ வேண்டும்'

ADDED : டிச 01, 2025 01:25 AM


Google News
Latest Tamil News
மணலிபுதுநகர்: ''அகில திரட்டு அய்யாபதியின் போதனைகள் சமுதாயத்தில் பரவ வேண்டும்,'' என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.

அகில உலக அய்யா பதிகள் கூட்டமைப்பு, தாமரைகுளம் பதி குரு பரம்பரை அறக்கட்டளை மற்றும் தர்மயுகா பவுண்டேஷன் சார்பில், அகிலதிரட்டு அம்மானை உதயதின யாத்திரை துவக்க விழா, நேற்று மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி திருமண மண்டபத்தில் நடந்தது.

யாத்திரையை துவக்கி வைத்து, கவர்னர் ரவி பேசியதாவது:

அய்யா வைகுண்டரை பி ன் தொடர்வதுடன், அவரது நெறிமுறைகளின்படி நடந்து கொள்கிறேன். மரத்தில் பல லட்சம் இலைகள், கிளைகள் இருக்கும். அவை ஒன்றுக்கொன்று மாறுப்பட்டிக்கும். அது போல், உணவு, உடை, மொழி அடிப்படையில் நாம் பிரிந்து கிடந்தாலும், அனைவரும் ஒரே குடும்பம் என்பதை தான் சனாதனம் போதிக்கிறது.

தமிழகம் வந்த நிலையில், சில மாதங்களிலேயே அய்யாவை பற்றி தெரிந்துக் கொண்டேன். இது குறித்து பிரதமர் மோடியிடம் சொல்ல முயன்றபோது, அவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. அவரும் அய்யாவின் வழிமுறைகளை பின்பற்ற கூடியவர்.

அகில திரட்டு மற்றும் அய்யாவின் போதனைகள் சமுதாயத்தில் பரவ செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், ஐ.பி.ஏ.சி., தலைவர் ராமலிங்கம், ம ணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் தலைவர் துரைப்பழம் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us