/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சாலையில் கழிவுநீர் தேங்குவதை கண்டித்து பெரம்பூரில் மறியல் சாலையில் கழிவுநீர் தேங்குவதை கண்டித்து பெரம்பூரில் மறியல்
சாலையில் கழிவுநீர் தேங்குவதை கண்டித்து பெரம்பூரில் மறியல்
சாலையில் கழிவுநீர் தேங்குவதை கண்டித்து பெரம்பூரில் மறியல்
சாலையில் கழிவுநீர் தேங்குவதை கண்டித்து பெரம்பூரில் மறியல்
ADDED : செப் 25, 2025 12:31 AM

பெரம்பூர்,சாலையில் கழிவுநீர் தேங்குவதை கண்டித்து, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பூர், மேல்பட்டி பொன்னப்பன் சாலை மற்றும் பி.பி.சாலை சந்திப்பில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்குவதால், அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது.
இதனால் எஸ்.எஸ்.வி., கோவில் தெரு மற்றும் ஆர்.வி.கோவில் தெரு பகுதியை சேர்ந்த, 40க்கும் மேற்பட்டோர், பெரம்பூர் பி.பி.சாலை சந்திப்பில் நேற்று காலை திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த செம்பி யம் போலீசார், மாநகராட்சி மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள், அவர்களிடம் பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, மறியலை கைவிட்டு சென்றனர்.
இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.