/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஜி.எஸ்.டி.குறைப்பு; கடைகளில் மக்கள் ஜே ஜே! ஜி.எஸ்.டி.குறைப்பு; கடைகளில் மக்கள் ஜே ஜே!
ஜி.எஸ்.டி.குறைப்பு; கடைகளில் மக்கள் ஜே ஜே!
ஜி.எஸ்.டி.குறைப்பு; கடைகளில் மக்கள் ஜே ஜே!
ஜி.எஸ்.டி.குறைப்பு; கடைகளில் மக்கள் ஜே ஜே!

'கார் விற்பனை அதிகரிக்கும்'
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால், கார்களின் விலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள், தங்களாலும் கார் வாங்க முடியும் என்ற நம்பிக்கையை, இந்த சீர்திருத்தம் ஏற்படுத்தி உள்ளது. க்விட் மாடல், ரூ.45 ஆயிரம் வரையும், கைகர் - ரூ.95 ஆயிரம் வரையும், ட்ரைபர் - ரூ.80 ஆயிரம் வரையும் விலை குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி.யில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து, எங்களுக்கான என்கொயரி 4 மடங்கு அதிகரித்துள்ளது. கார் வாங்குவோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.
'அனைவருக்கும் பெரிய டிவி'
வாடிக்கையாளர்களுக்கு இது உண்மையான திருவிழா. வீட்டு உபயோகப் பொருட்களான 'டிவி', ஏ.சி., மீதான 28 சதவீத வரி, தற்போது 18 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த சீரமைப்பால், ரூ.3,000 முதல் 40 ஆயிரம் வரை விலை குறைந்துள்ளது. சில மாதங்களாக விற்பனை சுமாராக இருந்தது. திருவிழா காலம் துவங்கியதும் விற்பனை சூடுபிடிக்கும் என்று எண்ணினோம். அதற்கு ஏற்ப இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். விற்பனையும் அதிகரித்துள்ளது. தங்கள் பட்ஜெட்டில் சிறிய ரக 'டிவி' வாங்கலாம் என்றிருந்த வாடிக்கையாளர்கள், அவர்களின் பட்ஜெட்டிலேயே அதை விட பெரிய ரக 'டிவி' வாங்கிச் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

'விற்பனை மேலும் அதிகரிக்கும்'
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வழக்கமாக இருக்கும் 'என்கொயரி'யை காட்டிலும் அதிகமாக இருக்கிறது. சீர்திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, ஏராளமானோர் போன் செய்து, 'புக்கிங்' செய்துள்ளனர். சீர்திருத்தம் அமலுக்கு வந்ததையடுத்து, அவர்களுக்கு டெலிவரி செய்யும் பணி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஸ்கூட்டர்களுக்கு ரூ.8,000 முதல் ரூ.13 ஆயிரம் வரை விலை குறைந்துள்ளது. பைக்குகளுக்கு, ரூ.20 ஆயிரம் வரை விலை குறைந்துள்ளது. வரும் நாட்களில் மேலும் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
'புது ஜி.எஸ்.டி.வரப்பிரசாதம்'
ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பொதுமக்கள் மற்றும் எங்களை போன்ற நிறுவனத்தினருக்கு ஒரு வரப்பிரசாதம். ஏ.சி., 'டிவி' விற்பனை அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஜி.எஸ்.டி.யில் சீர்திருத்தம் கொண்டு வருவதாக, அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நேற்று முன்தினம் வரை, பெரிய அளவில் விற்பனை இல்லை. ஆனால், கடந்த இரு நாட்களாக விற்பனை ஜோராக நடக்கிறது. 28 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களின் வாங்கும் திறனும் அதிகரித்துள்ளது.