/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரூர் நகராட்சியாக அறிவிப்பு தி.மு.க.,வினர் இனிப்பு வழங்கல் அரூர் நகராட்சியாக அறிவிப்பு தி.மு.க.,வினர் இனிப்பு வழங்கல்
அரூர் நகராட்சியாக அறிவிப்பு தி.மு.க.,வினர் இனிப்பு வழங்கல்
அரூர் நகராட்சியாக அறிவிப்பு தி.மு.க.,வினர் இனிப்பு வழங்கல்
அரூர் நகராட்சியாக அறிவிப்பு தி.மு.க.,வினர் இனிப்பு வழங்கல்
ADDED : ஜூலை 14, 2024 02:53 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாளையம்புதுாரில் ஊரக பகுதிகளுக்கான, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை கடந்த, 11ல் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
அப்போது, மோப்பிரிப்பட்டி, தொட்டம்பட்டியை இணைத்து, அரூர் டவுன் பஞ்., அரூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்படும், அரூர் அரசு மருத்துவமனைக்கு விரிவாக்கம் செய்ய, 51 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார். இதை வரவேற்று நேற்று அரூர் கச்சேரிமேட்டில், தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் பழனியப்பன் தலைமையில், அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். முன்னதாக, அண்ணா-துரை, அம்பேத்கர் சிலைகளுக்கு பழனியப்பன் மாலை அணி-வித்தார். நிகழ்ச்சியில், தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி, மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கூட்-டணி கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.