Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 194 புதிய ஓட்டுச்சாவடிகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 194 புதிய ஓட்டுச்சாவடிகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 194 புதிய ஓட்டுச்சாவடிகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 194 புதிய ஓட்டுச்சாவடிகள்

ADDED : செப் 26, 2025 02:10 AM


Google News
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, வரைவு ஓட்டுச்சாவடி பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான தினேஷ்குமார், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

பின்னர் அவர் கூறுகை யில், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடக்க உள்ளது.

அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, 1,896 ஓட்டுச்சாவடிகளில், 100 சதவீதம் களப்பணி மேற்கொள்ளப்பட்டு, 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரித்தும், நிர்வாக நலன் கருதி, 1,200 வாக்காளர்களுக்கு குறைவாக உள்ள சில ஓட்டுச்சாவடியை இரண்டாக பிரித்தும் புதிதாக, 194 ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்பட்டு மொத்தம் 2,090 ஓட்டுச்சாவடிகள் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் தயாராகி உள்ளது.அதன்படி, ஊத்தங்கரை தொகுதியில், 288 ஓட்டுச்சாவடிகளிலிருந்து, 319 ஓட்டுச்சாவடியாக அதிகரித்துள்ளது. பர்கூரில், 292 ஓட்டுச்சாவடியிலிருந்து, 324 ஓட்டுச்சாவடியாகவும், கிருஷ்ணகிரியில், 310ல் இருந்து, 340, ஓசூரில், 388ல் இருந்து, 445, வேப்பனஹள்ளியில், 313லிருந்து, 342 மற்றும் தளி சட்டசபை தொகுதியில், 305 ஓட்டுச்சாவடிகளில் இருந்து, 320 ஓட்டுச்சாவடிகள் என மொத்தம், 2,090 ஓட்டுச்சாவடிகளும், புதிதாக, 194 ஓட்டுச்சாவடிகளும் உருவாக்கப்பட்டுள்ளன,” என்றார்.

மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, ஓசூர் சப் - கலெக்டர் ஆக்ரிதி சேத்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us