/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சேமிப்பு கணக்கு தொடங்க பள்ளிகளில் முகாம் சேமிப்பு கணக்கு தொடங்க பள்ளிகளில் முகாம்
சேமிப்பு கணக்கு தொடங்க பள்ளிகளில் முகாம்
சேமிப்பு கணக்கு தொடங்க பள்ளிகளில் முகாம்
சேமிப்பு கணக்கு தொடங்க பள்ளிகளில் முகாம்
ADDED : ஜூலை 17, 2024 12:26 AM
திண்டுக்கல் : பள்ளி மாணவர்கள் உதவித்தொகைகள் பெற பள்ளி வளாகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் நிலையில், ஆதாரில் பயோமெட்ரிக் அலைபேசி எண் அப்டேட் செய்ய போஸ்ட் ஆபீஸ்களை அணுகலாம் என திண்டுக்கல் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் குமரன் கூறி உள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது : திண்டுக்கல் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களில் பள்ளி மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்குவது சம்பந்தமாக, தமிழக அரசு, இந்திய அஞ்சல் துறையின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி பள்ளி வளாகங்களிலே புதிய சேமிப்பு கணக்கு தொடங்க சிறப்பு முகாம்கள் நடந்து வருகின்றன. இதில் அஞ்சல் சேமிப்பு கணக்கு,இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கி கணக்கை தொடங்கி கொள்ளலாம். ஆதார், அடையாள அட்டை, பாஸ்போர்ட் புகைப்படம், பெற்றோரின் அலைபேசி எண் அவசியமாகிறது.
திண்டுக்கல், பழநி, நிலக்கோட்டை மூன்று தலைமை போஸ்ட் ஆபீஸ்களிலும் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. அருகில் உள்ள துணை போஸ்ட் ஆபீஸ்களிலும் காலை 9:00மணி முதல் 4:00 மணி வரை ஆதார் மையம் செயல்படுகிறது. பொதுமக்களும் பயோமெட்ரிக், அலைபேசி எண் அப்டேட் செய்து கொள்ளலாம் என்றார்.