ADDED : ஜூலை 17, 2024 12:26 AM
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் மலைப்பகுதி கிராமங்களில் அவரைக்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது.
பத்து நாட்களுக்கு முன்பு வரை விளைச்சல் குறைவாக இருந்ததால் வரத்து குறைந்து காணப்பட்டது. அப்போது ஒரு கிலோ பெல்ட் அவரைக்காய் ரூ.110 க்கு விற்பனை ஆனது. தற்போது வரத்து அதிகரிக்க கிலோ பெல்ட் அவரை ரூ.45 க்கு விற்பனை ஆனது.விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.