ADDED : மார் 18, 2025 01:34 AM
ஒரு வாரத்தில் பதிய உத்தரவு
ஈரோடு:ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் இயங்கும் கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி, சுருட்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள், விவசாயம் சார்ந்த தொழில்கள், கோழிப்பண்ணை, பிற வணிக நிறுவனங்களில் பணிபுரியும், பணி அமர்த்தப்படும் பிற மாநில தொழிலாளர் விபரங்களை, https://labour.tn.gov.inல் பதிவு செய்ய வேண்டும். வரும் காலங்களில் வெளி மாநில தொழிலாளர்களை பணி அமர்த்தும் முன், அவர்களது விபரங்களை இந்த வலைதளத்தில் பதிவு செய்த பின்னரே பணிக்கு அமர்த்த வேண்டும். ஏற்கனவே பணி செய்வோர் விபரம் ஒரு வாரத்துக்குள் வலைதளத்தில் பதிவிட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.