/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நுால் மில்லில் தீ விபத்து பல லட்சம் ரூபாய் சேதம் நுால் மில்லில் தீ விபத்து பல லட்சம் ரூபாய் சேதம்
நுால் மில்லில் தீ விபத்து பல லட்சம் ரூபாய் சேதம்
நுால் மில்லில் தீ விபத்து பல லட்சம் ரூபாய் சேதம்
நுால் மில்லில் தீ விபத்து பல லட்சம் ரூபாய் சேதம்
ADDED : ஜூன் 10, 2024 01:27 AM
காங்கேயம்: காங்கேயம் அருகே நுால் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து விட்டது.
காங்கேயத்தை அடுத்த சிவன்மலை கிராமம், ராமபட்டினம் தமிழ்ச்செல்வன் என்பவருக்கு சொந்தமான ஸ்பின்னிங் மில் செயல்பட்டு வருகிறது. இதில் கழிவு பஞ்சில் இருந்து நுால் தயாரிக்கும் பணி நடக்கிறது. மில்லில், 30க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர். மில்லின் ஒரு பகுதியில் நேற்று மாலை இயந்திரத்தில் தீப்பிடித்து, பஞ்சுக்கு பரவி பற்றி எரிந்தது. காங்கேயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் பஞ்சு மற்றும் இயந்திரம் எரிந்து விட்டது. சேத மதிப்பு பல லட்சம் ரூபாய் வரை இருக்கும் என தெரிகிறது. மின் கசிவால் தீப்பிடித்துள்ளது. இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.