/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி ஈரோட்டில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
ஈரோட்டில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
ஈரோட்டில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
ஈரோட்டில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
ADDED : ஜூன் 10, 2024 01:27 AM
ஈரோடு: மத்திய பனை பொருட்கள் நிறுவனம் சார்பில், ஈரோட்டில் மேட்டூர் சாலையில், திருச்சி கபே அருகில் உள்ள ஜெம் & ஜுவல்லரி டெக்னாலஜி பயிற்சி மையத்தில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, வரும், 21ம் தேதி முதல் ஜூலை, 2ம் தேதி வரை நடக்கிறது. இதில், 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். கல்வி தகுதி குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி. பயிற்சி இறுதியில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்கள் தேசிய கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நகை அடகு நிதி நிறுவனங்களிலும், நகை மதிப்பீட்டாளாராகவும் பணியில் சேரலாம். சுயமாக நகை கடை, நகை அடமான கடை நடத்த தகுதி பெறுவர். நகை வியாபார நிறுவனங்களில் மதிப்பீட்டாளாராக, விற்பனையாளராக பணியில் சேரலாம்.
பயிற்சியில் சேர விரும்புவோர் மூன்று ஸ்டாம்ப் சைஸ் போட்டோ, முகவரி சான்றிதழ், கல்வி சான்றிதழுடன் அணுகவும். பயிற்சி கட்டணம், 5,300 ரூபாய், ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து, 6,254 ரூபாய் ஆகும். விபரங்களுக்கு, 94437-28438 என்ற மொபைல் எண்ணை அணுகலாம்.