/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குறிச்சி ஊராட்சி மக்கள் குடிநீர் கேட்டு மறியல் குறிச்சி ஊராட்சி மக்கள் குடிநீர் கேட்டு மறியல்
குறிச்சி ஊராட்சி மக்கள் குடிநீர் கேட்டு மறியல்
குறிச்சி ஊராட்சி மக்கள் குடிநீர் கேட்டு மறியல்
குறிச்சி ஊராட்சி மக்கள் குடிநீர் கேட்டு மறியல்
ADDED : ஜூன் 10, 2024 01:28 AM
பவானி: அம்மாபேட்டை அருகே குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட நாகம்பாளையம், கொளந்தபாளையம், கரட்டுகொட்டாய், தர்கா, அம்மன்கோவில் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு தினமும் காலையில், அந்தந்த பகுதி போர்வெல் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த, 15 நாட்களாக குடிநீர் வராததால், ஊராட்சி நிர்வாகத்திடம் புகாரளித்துள்ளனர். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த மக்கள், சித்தார் - பூனாட்சி சாலை தர்கா பகுதியில், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அம்மாபேட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளிக்கவே, கலைந்து சென்றனர். இதனால் ஒன்றரை மணி நேரம்
போக்குவரத்து பாதித்தது.