பஸ்களின் வேகம்: தி.மு.க.,வினர் மனு
பஸ்களின் வேகம்: தி.மு.க.,வினர் மனு
பஸ்களின் வேகம்: தி.மு.க.,வினர் மனு
ADDED : ஜூன் 13, 2024 06:25 AM
மதுரை: 'மதுரை - தேனி இடையே இயக்கப்படும் அரசு, தனியார் பஸ்களின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தி.மு.க., சார்பில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சிங்காரவேலு (மதுரை தெற்கு), சுகந்தி (உசிலம்பட்டி) ஆகியோரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டது.
தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் அளித்த மனு விவரம்: இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்கள் வேகக்கட்டுப்பாட்டை பின்பற்றுவதில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக தேனி - ஆண்டிபட்டி- உசிலம்பட்டி இடையே அடிக்கடி நடக்கும் விபத்துகளால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் செல்லம்பட்டியில் ஒரு கடைக்குள் பஸ் பாய்ந்தும், கல்லுாரி மாணவர் மீது மோதியும் விபத்துகள் நடந்துள்ளன. மக்கள் போராட்டம் நடத்தினாலும் நடவடிக்கை இல்லை.
வேகமாக இயக்கப்படும் பஸ்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மதுரை, தேனி கலெக்டர்களிடமும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.