ADDED : ஜூன் 13, 2024 06:29 AM
கோயில்
காஞ்சி மகா பெரியவா விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு குருவார புஷ்பாஞ்சலி, மகா தீபாராதனை: மகா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
வைகாசி திருவிழா: ஜெனகை மாரியம்மன் கோயில், சோழவந்தான், 4ம் நாள், சப்பரத்தில் அம்மன் புறப்பாடு, காலை 10:45மணி, கமலாசனத்தில் அம்மன் வீதி உலா, இரவு 7:00மணி.
கும்பாபிஷேகம்: வஞ்சியம்மன் கோயில், வஞ்சிநகரம், காலை 9:00 மணி.
பக்தி சொற்பொழிவு
பிரகலாத சரித்திரம் - கம்பராமாயண தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான் திருச்சி கல்யாணராமன், தியாகராஜர் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: கருமுத்து கண்ணன் நினைவு அறக்கட்டளை, அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.
பக்தி யோகம்: நிகழ்த்துபவர் - ஜிதேஸ் சைதன்யா, ஸத்சங்கம், தேவகி மெடிக்கல் அருகில், எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: சின்மயா மிஷன், ஸத்சங்கம், மாலை 6:30 முதல் இரவு 7:45 மணி
மகான்கள் தரிசனம்: நிகழ்த்துபவர் - ஓம் சக்தி நடேசன், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, மதுரை, மாலை 6:30 மணி.
அகண்டநாமம், ஸத்சங்கம்: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 8:00 மணி.
ஞானேஸ்வரி ப்ரவசனம்: நிகழ்த்துபவர் - ரகுநாத்தாஸ் மகாராஜ், 'விஸ்வாஸ் யாகசாலை' வசுதாரா, 84, திருப்பரங்குன்றம் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி, ஹரி கீர்த்தனம்: நிகழ்த்துபவர் - துகாராம் கணபதி மகாராஜ், இரவு 7:30 மணி.
திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
பொது
மதுரை கிழக்குக் கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: உதவி செயற்பொறியாளர் அலுவலகம், மேலுார், பங்கேற்பு: மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர், காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
காந்தியடிகளை அறிந்து கொள்வோம் - பத்து நாள் படிப்பிடை பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: செயலாளர் நந்தாராவ், வாழ்த்துரை: காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், சிறப்புரை: யோகா ஆசிரியர் பழனிக்குமார், பங்கேற்பு: தியாகராஜர் கல்லுாரி தமிழ்த்துறை இளங்கலை மாணவர்கள், காலை 11:00 மணி.
இலவச சமஸ்கிருத பேச்சுப் பயிற்சி: தான்யா வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், மதுரை, ஏற்பாடு: ஸம்ஸ்க்ருத பாரதி, காலை 10:30 முதல் மதியம் 12:30 மணி வரை.
கண்காட்சி
அரசுப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.
விருதுநகர் மாவட்டம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவியரின் சிறந்த படைப்புகள் அடங்கிய ஓவியக் கண்காட்சி: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை.
மருத்துவம்
தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழை காண்பித்து இலவச கண் பரிசோதனை செய்துகொள்ளும் முகாம்: ஸ்ரீ ராம்சந்திரா கண் மருத்துவமனை, குட் ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.
யோகா, தியானம்
இலவச தியானம், மூச்சுப் பயிற்சி: ஸ்வஸ்தம், 9 ஏ, செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, காலை 6:00 முதல் 7:00 மணி வரை.