/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வக்கீல் வானவில் ரவியின் எழுத்து உலக பயிலரங்கம் வக்கீல் வானவில் ரவியின் எழுத்து உலக பயிலரங்கம்
வக்கீல் வானவில் ரவியின் எழுத்து உலக பயிலரங்கம்
வக்கீல் வானவில் ரவியின் எழுத்து உலக பயிலரங்கம்
வக்கீல் வானவில் ரவியின் எழுத்து உலக பயிலரங்கம்
ADDED : செப் 23, 2025 09:00 PM

பாலக்காடு; பாலக்காடு, தமிழ் கலாசார மையம் சார்பில், தமிழ், ஆங்கில கவிஞரும், எழுத்தாளருமான வானவில் ரவியின், எழுத்து உலகம் குறித்து, பாலக்காடு மாவட்டம் சித்தூர் அரசு கல்லூரியில் நேற்று பயிலரங்கம் நடந்தது.
பயிலரங்கத்தை கல்லூரி துணை முதல்வர் சுஷா துவக்கி வைத்தார். கல்லூரி தமிழ் துறை முன்னாள் தலைவர் ஞானப்பழம் தலைமை வகித்தார். தமிழ் கலாசார மைய இயக்குனர் ராஜாராம் அறிமுக உரையாற்றினார். வானவில் ரவி ஏற்புரையாற்றினார்.
கல்லூரி தமிழ் துறை முன்னாள் தலைவர் கருப்புசாமி, அரசு விக்டோரியா கல்லூரி தமிழ் துறை முன்னாள் தலைவர் சமுத்திரபாண்டியன், கோவை பாரதியார் பல்கலைக்கழக தமிழ் துறை தலைவர் தங்கமணி, பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரி தமிழ் முதுகலைத் துறை தலைவர் ராஜ்குமார், சித்தூர் அரசு கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் சிவமணி, இணைப் பேராசிரியர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வக்கீலுமான வானவில் ரவியின், எழுத்துக்கள் குறித்து, கடந்த 2015 முதல் இதுவரை 130 பயிலரங்கம், பாலக்காடு தமிழ் கலாசார மையம் சார்பில் நடத்தப்பட்டது.