ADDED : ஜூலை 30, 2024 05:40 AM
சிவகங்கை : பனங்குடி ரயில்வே ஸ்டேஷனில் சென்னை -ராமேஸ்வரம், திருச்சி-- ராமேஸ்வரம் ரயில் நின்று செல்ல வேண்டும் என வளர்ச்சி குழு கூட்டத்தில் வலியுறுத்தினர்.
மதுரை ரயில்வே கோட்ட வணிக ஆய்வாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். ஸ்டேஷன் மாஸ்டர் தர்மேந்திர சவுத்ரி முன்னிலை வகித்தார். ஆலோசனை குழு உறுப்பினர்கள் பில்லப்பன், வள்ளி உட்பட அதிகாரிகள்பங்கேற்றனர்.
கூட்டத்தில், பனங்குடி ரயில்வே ஸ்டேஷனில் இரண்டு பிளாட்பார்ம்களில் மேற்கூரை வசதி இல்லை. இங்கு மேற்கூரை வசதி செய்து தர வேண்டும். பயணிகள் குடிநீருக்கென சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பொருத்தி குடிநீர் வழங்க வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.