/உள்ளூர் செய்திகள்/தேனி/ கதவை பூட்டாமல் துாங்கியவர் வீட்டில் நகை, பணம் திருட்டு கதவை பூட்டாமல் துாங்கியவர் வீட்டில் நகை, பணம் திருட்டு
கதவை பூட்டாமல் துாங்கியவர் வீட்டில் நகை, பணம் திருட்டு
கதவை பூட்டாமல் துாங்கியவர் வீட்டில் நகை, பணம் திருட்டு
கதவை பூட்டாமல் துாங்கியவர் வீட்டில் நகை, பணம் திருட்டு
ADDED : ஜூலை 17, 2024 12:19 AM
தேனி : தேனி எம்.ஜி.ஆர்., நகர் ஜவகர்லால் தெரு கலாவதி 59. தையல் தொழிலாளி. இவரது கணவர் 4 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
மகன், மகள் திருமணம் முடித்து வெளியூரில் வசிக்கின்றனர். கலாவதி வெளியூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு ஜூலை 14ல் இரவு 10:00 மணிக்கு வீட்டிற்கு வந்து இரும்புக் கேட்டை பூட்டிவிட்டு, முன்கதவை பூட்டாமல் துாங்கிவிட்டார்.
மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது, பீரோவில் வைத்திருந்து ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள 3 பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசி என ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்கநகை, பணம் திருடப்பட்டு இருந்தது.
கலாவதி புகாரில், எஸ்.ஐ., முருகேசன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.