ADDED : ஜூலை 17, 2024 12:19 AM
போடி : போடி,சிலமலை பட்டாளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வழக்கறிஞர் தங்கப்பாண்டி 25. சிலமலையில் இவரது அத்தை செல்லமணி என்பவரின் இறுதி ஊர்வலம் நடந்துள்ளது.
அப்போது இதே பகுதியைச் சேர்ந்த மாரிச்சாமி, பெருமாள், கண்ணீஸ்வரன், ராமர், குமார் ஆகியோர் சேர்ந்து இறந்தவரின் சடலத்தை நாங்கள் தான் தூக்குவோம் என கூறி, தங்கபாண்டியை தகாத வார்த்தையால் பேசி, கையால் அடித்து காயம் ஏற்படுத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். போடி தாலுகா போலீசார் மாரிச்சாமி, பெருமாள் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.