ADDED : ஜூலை 17, 2024 12:19 AM
தேனி : தேனி பவர்ஹவுஸ் தெரு ஆவின் பால்பண்ணை டிரைவர் பாலாஜி 28. இவரது தந்தை பாண்டியன் 64, சலவை தொழில் செய்கிறார். அதிகாலை 3:00 மணிக்கு டீ குடிக்க சென்றவரை, தேனி -பெரியகுளம் ரோடு டெக்ஸ்டைல் கடை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்றது.
இதில் முதியவர் பாண்டியன் இறந்துவிட்டார். மகன் பாலாஜி புகாரில், தேனி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.