/உள்ளூர் செய்திகள்/தேனி/ தெருவை இரண்டாக பிரித்து சாக்கடை அமைத்ததால் அவதி; ஊஞ்சாம்பட்டி ஊராட்சி,டெலிபோன் நகரில் அலறும் பொதுமக்கள் தெருவை இரண்டாக பிரித்து சாக்கடை அமைத்ததால் அவதி; ஊஞ்சாம்பட்டி ஊராட்சி,டெலிபோன் நகரில் அலறும் பொதுமக்கள்
தெருவை இரண்டாக பிரித்து சாக்கடை அமைத்ததால் அவதி; ஊஞ்சாம்பட்டி ஊராட்சி,டெலிபோன் நகரில் அலறும் பொதுமக்கள்
தெருவை இரண்டாக பிரித்து சாக்கடை அமைத்ததால் அவதி; ஊஞ்சாம்பட்டி ஊராட்சி,டெலிபோன் நகரில் அலறும் பொதுமக்கள்
தெருவை இரண்டாக பிரித்து சாக்கடை அமைத்ததால் அவதி; ஊஞ்சாம்பட்டி ஊராட்சி,டெலிபோன் நகரில் அலறும் பொதுமக்கள்

தெரு பள்ளம், சாக்கடை உயரம்
சாக்கடை அமைக்கும் போது தெருவின் மைய பகுதியில் 3அடி உயரத்திற்கு அமைத்து விட்டனர். ஆனால் இன்று வரை ரோடு அமைக்க வில்லை. இதனால் தெருவின் ஒரு பகுதியினர் பொம்மையகவுண்டன்பட்டி வழியாகவும், மறுபகுதியினர் சுக்குவாடன்பட்டி வழியாகவும் மெயின்ரோடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர் கேடு ஏற்படுகிறது. ரோடு அமைக்காததால் சிறிய மழை பெய்தாலே மண் ரோடு சகதியாக மாறி பலர் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். இதனால் முதியோர் வீட்டை விட்டு வெளியே வர பயப்படுகின்றனர். ஆபத்திற்கு கூட தெவிற்குள் ஆட்டோக்கள் வர முடியவில்லை. ரோடு அமைக்காததால் ஆம்புலன்ஸ் வருவது கூட சிரமமாக உள்ளது.இது ஒரு புறம் இருக்க விஷ பூச்சிகள் வீட்டிற்குள் வருவதும் தொடர்கிறது. இதனால் குழந்தைகளுடன் வசிக்கும் பெண்கள் அச்சத்தில் உள்ளனர்.
குடிநீர் தட்டுப்பாடு
ஊராட்சி மூலம் வீடுகளுக்கு வழங்கப்பட்ட குழாய் இணைப்பில் குடிநீர் வழங்குவது இல்லை. இதனால் பணம் கொடுத்து குடிநீர் வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. இப்பகுதியில் இரவில் தெருவிளக்குகளும் சரிவர எரிவதில்லை. தெருநாய் தொல்லைகளும் அதிகம் உள்ளது. ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. அதனை சீரமைக்க மின்வாரியத்திடம் கூறினாலும் நடவடிக்கை இல்லை. இப்பகுதிக்கு சிமென்ட் ரோடு அமைக்கவும், கழிவு நீர் சாக்கடையை சீரமைத்து கட்டித்தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.