/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கழிவுநீர் கால்வாய் சேதம் சீரமைக்க எதிர்பார்ப்பு கழிவுநீர் கால்வாய் சேதம் சீரமைக்க எதிர்பார்ப்பு
கழிவுநீர் கால்வாய் சேதம் சீரமைக்க எதிர்பார்ப்பு
கழிவுநீர் கால்வாய் சேதம் சீரமைக்க எதிர்பார்ப்பு
கழிவுநீர் கால்வாய் சேதம் சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 28, 2024 10:59 PM

திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் ஊராட்சிக்கு உட்பட்ட ரயில் நிலைய சாலை, விநாயகர் கோவில் தெரு, பொன்னியம்மன் கோவில் தெருவில், 250க்கும் மேற்பட்ட வீடுகளில் சேகரமாகும் கழிவுநீர் செல்வதற்காக, 2006ம் ஆண்டு கால்வாய் கட்டப்பட்டது.
தற்போது, அந்த கால்வாயில் பல இடங்களில் சேதமடைந்தும், கழிவுநீர் தேங்கியும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், அப்பகுதியில் நோய் தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக, பகுதிவாசிகள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, சேதமடைந்த கால்வாயை ஒன்றிய நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.