/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வசதியற்ற சமுதாயக்கூடம் மக்களுக்கு பயன் இல்லை வசதியற்ற சமுதாயக்கூடம் மக்களுக்கு பயன் இல்லை
வசதியற்ற சமுதாயக்கூடம் மக்களுக்கு பயன் இல்லை
வசதியற்ற சமுதாயக்கூடம் மக்களுக்கு பயன் இல்லை
வசதியற்ற சமுதாயக்கூடம் மக்களுக்கு பயன் இல்லை
ADDED : ஜூலை 14, 2024 11:13 PM

அனுப்பர்பாளையம்:நெருப்பெரிச்சலில் அமைக்கப்பட்டுள்ள சமத்துவபுரத்தில் மாநகராட்சி சார்பில், சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டுள்ளது.
சமுதாய கூடத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை.
பொதுமக்கள் கூறுகையில், ''சமத்துவபுரம் மட்டுமின்றி வாவிபாளையம், நெருப்பெரிச்சல், தோட்டத்து பாளையம், ஜெ.ஜெ., நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏழைகள் வீட்டு விசேஷங்களுக்கு சமுதாய கூடத்தையே நம்பி உள்ளனர். சமுதாய கூடத்தை சுற்றி முட்புதர்கள் மண்டி உள்ளது. குடிநீர் குழாய் உடைந்துள்ளது. குளியல் அறை மற்றும் கழிப்பிடத்திற்கு தண்ணீர் வசதி இல்லை. சமையலறையில் போதிய வசதிகள் இல்லை. விசேஷங்கள் நடத்த முடியாத நிலையில் உள்ளது. சமுதாய நலக்கூடம் முழுவதும் அசுத்தமாக உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் சமுதாய கூடத்தில் அடிப்படை வசதிகள் செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
----
நெருப்பெரிச்சல், சமத்துவபுரத்தில் உள்ள சமுதாய நலக்கூடம்.