நகரில் நுழைய தடை அனுப்பர்பாளையம் போலீஸ் சரித்திர பதிவேடு குற்றவாளி கருப்பையா, 23 என்பவர், தொடர் பொதுமக்களுக்கும், பொது சுகாதாரத்துக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. அவர் மாநகர போலீஸ் பகுதிக்குள் நுழைவதற்கு ஒரு ஆண்டு தடை விதித்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, அவரை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
7.6 கிலோ கஞ்சா பறிமுதல் திருப்பூர் மதுவிலக்கு போலீசார் ரயில்வே ஸ்டேஷன் அருகே சோதனை செய்து கொண்டிருந்தனர். சந்தேகப்படும் வகையில் வெளியேறிய வடமாநிலத்தினர் மற்றும் அவர்கள் பைகளில் சோதனை செய்தனர். அப்போது, கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தனர். அதில், 7.6 கிலோ கஞ்சா இருந்தது. அதனை கைப்பற்றி மதுவிலக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.