/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தபால் ஓட்டு எண்ணும் பணிக்கு மரத்தால் ஆன ரேக்குகள் தயாரிப்பு தபால் ஓட்டு எண்ணும் பணிக்கு மரத்தால் ஆன ரேக்குகள் தயாரிப்பு
தபால் ஓட்டு எண்ணும் பணிக்கு மரத்தால் ஆன ரேக்குகள் தயாரிப்பு
தபால் ஓட்டு எண்ணும் பணிக்கு மரத்தால் ஆன ரேக்குகள் தயாரிப்பு
தபால் ஓட்டு எண்ணும் பணிக்கு மரத்தால் ஆன ரேக்குகள் தயாரிப்பு
ADDED : ஜூன் 02, 2024 05:20 AM

விழுப்புரம்: விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதி தேர்தலில் பதிவான தபால் ஓட்டுகள் எண்ணுவதற்காக மரத்திலான ரேக்குகள் தயாரிப்பு பணி நடக்கிறது.
விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதி தேர்தலில் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வி.வி., பேட் இயந்திரங்கள் அனைத்தும் ஓட்டுகளை எண்ணும் மையமான விழுப்புரம் அரசு கலை கல்லுாரியில் மூன்றடுக்கு பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஓட்டுகள் அனைத்தும் வரும் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது.
இதையொட்டி, ஓட்டு எண்ணும் மையமான விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரியில் அரசியல் பிரமுகர்கள் அமருவதற்கான ஷாமியானா பந்தல் மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணி முழுவீச்சில் நடக்கிறது.
தொடர்ந்து, ஓட்டு எண்ணிக்கையின் போது, முதலாவதாக எண்ணப்பட உள்ள தபால் ஓட்டுகளை ஒவ்வொரு மர பெட்டி பாக்ஸ்களில் வைத்து எண்ணும் பணிகள் நடக்கிறது.
இதற்காக மரத்தினால் ஆன ரேக்குகள் தயார் செய்யும் பணிகள் நடந்தது.