ADDED : அக் 11, 2025 03:48 AM
சிவகாசி: சிவகாசி அரசு கலை அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம், ஆர்.டி.ஓ., அலுவலகம் சார்பில் மக்களிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது.
ஆர்.டி.ஓ., பாலாஜி துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் விஜயராணி முன்னிலை வகித்தார்.
மாரத்தான் வட்டம் கல்லுாரியில் துவங்கி ஹவுஸிங் போர்டு, கங்காகுளம் வழியாக சாட்சியாபுரம் சென்று மீண்டும் கல்லுாரியில் முடிந்தது. தாசில்தார் லட்சம், தொழிலதிபர் செந்தில்குமார், உடற்கல்வி இயக்குனர் வைரமுத்து, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கணேச முருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


