Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 600 கி.மீ., ஊராட்சி சாலைகள் ரூ.680 கோடியில் மேம்பாடு; அமைச்சர் வேலு அறிவிப்பு

600 கி.மீ., ஊராட்சி சாலைகள் ரூ.680 கோடியில் மேம்பாடு; அமைச்சர் வேலு அறிவிப்பு

600 கி.மீ., ஊராட்சி சாலைகள் ரூ.680 கோடியில் மேம்பாடு; அமைச்சர் வேலு அறிவிப்பு

600 கி.மீ., ஊராட்சி சாலைகள் ரூ.680 கோடியில் மேம்பாடு; அமைச்சர் வேலு அறிவிப்பு

ADDED : ஜூன் 26, 2024 03:55 AM


Google News
Latest Tamil News
சென்னை : “நெடுஞ்சாலைத்துறை செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில் சில பிரிவுகளை மாற்றி அமைத்து, பணிகளை பகிர்ந்து, துறையின் செயல்திறனை மேம்படுத்த, துறை மறுசீரமைப்பு செய்யப்படும்,” என, அமைச்சர் வேலு அறிவித்துள்ளார்.

சட்டசபையில் அவரது அறிவிப்புகள்:


பாரம்பரிய கட்டடங்கள் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள, சென்னையில், மரபு கட்டடங்கள் வட்ட அலுவலகம் உருவாக்கப்படும்

lபொதுப்பணித்துறையில், 6 கோடி ரூபாய் மதிப்பிலான ஆய்வக உபகரண வசதியுடன், தரக்கட்டுப்பாடு உபகோட்ட அலுவலகங்கள் அமைக்கப்படும்

lகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டையில் புதிய ஆய்வு மாளிகை கட்டப்படும்

'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ், புறவழிச்சாலைகள், ஆற்றுப்பாலம், சாலைகள் விரிவாக்க பணிகளுக்கு, 1,055 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிலம் எடுப்பு செய்யப்படும்

நெடுஞ்சாலைத்துறை செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில், சில பிரிவுகளை மாற்றி அமைத்து, பணிகளை பகிர்ந்து, துறையின் செயல் திறனை மேம்படுத்த, துறை மறுசீரமைப்பு செய்யப்படும்

பாலங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து பழுதுகள் சரிபார்ப்பதற்கு, நிபுணத்துவம் வாய்ந்த பொறியாளர்களை கொண்ட பாலங்கள் சிறப்பு ஆய்வு பிரிவு உருவாக்கப்படும்

முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 200 கி.மீ., சாலைகள், நான்கு வழித்தடமாகவும், 550 கி.மீ., சாலைகள், இரு வழித்தடமாகவும் மேம்படுத்தப்படும்

காலநிலை மாற்றங்களால் ஏற்படும் வெள்ளப்பெருக்கை கையாளும் வகையில், தங்கு தடையற்ற போக்குவரத்துக்காக, 50 தரைப்பாலங்கள் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலங்களாக கட்டப்படும்

சாலை விபத்துகளை தடுக்கும் வகையில், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை சந்திப்புகள் மேம்படுத்தப்படும்

தென்காசி, ஆற்காடு, போடிநாயக்கனுார், திருநெல்வேலி நகரங்களுக்கு புறவழிச்சாலைகள், ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் முதல் அரசு மருத்துவமனை வரை புதிய இணைப்பு சாலை ஆகியவை, 321 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்

ராமேஸ்வரம் சுற்றுச்சாலை, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில், திருத்துறைப்பூண்டி, வத்திராயிருப்பு, மல்லாங்கிணறு ஆகிய நகரங்களுக்கு புறவழிச்சாலைகள்; மதுரை வெளிவட்ட சாலை முதல் சிவகங்கை சாலை வரை புதிய சாலை.

தஞ்சாவூர் மற்றும் அரியலுார் மாவட்டங்களை இணைக்கும் வகையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் ஆகியவை அமைக்கும் பணிகளுக்கு, 159 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிலம் கையகப்படுத்தப்படும்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், திருவண்ணாமலை புதிய பஸ் நிலையம் அருகே, 'எஸ்கலேட்டர்' வசதியுடன் கூடிய நடை மேம்பாலம், 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்

தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளை இணைக்கும் சாலைகள், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்

கொடைக்கானல், ஏற்காடு மலைப்பகுதிகளில் நவீன அறிவியல் தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி, நிலச்சரிவு ஏற்படுவதை தடுக்கும் பணிகள், 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்

நடப்பாண்டு, 600 கி.மீ., ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள், இதர மாவட்ட சாலைகளாக 680 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

சுங்கச்சாவடிகளை குறைக்க முயற்சி


சட்டசபையில் நடந்த விவாதம்:

பா.ம.க., - சிவகுமார்: தமிழகத்தில் சுங்கச்சாவடி சாலைகள் அதிகம் உள்ளன. தற்போது தேசிய நெடுஞ்சாலையில் மட்டும், 65 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஆட்சிக்கு வந்தபோது, 48 சுங்கச்சாவடிகள் மட்டும் இருந்தன. தி.மு.க., ஆட்சி வந்த பின், 17 சுங்கச்சாவடிகள் அதிகரித்துள்ளன.

இதே சட்டசபையில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், 'மத்திய அரசிடம் பேசி, விதிகளுக்கு புறம்பாக உள்ள சுங்கச்சாவடிகளை குறைப்போம்' என்றார். ஆனால், சுங்கச்சாவடிகள் அதிகரித்துள்ளன. சுங்கச்சாவடிகள் எண்ணிக்கையை குறைக்க, அரசு என்ன செய்துள்ளது; மத்திய அரசுடன் பேசியதா; எப்போது சுங்கச்சாவடி எண்ணிக்கை குறையும் என்ற விபரங்களை தெரிவிக்க வேண்டும்.

மாநில சாலைகளை, தேசிய நெடுஞ்சாலையிடம் ஒப்படைக்காமல், கூடுதல் நிதி ஒதுக்கி, நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும். சென்னை பெருங்களத்துார் - செங்கல்பட்டு இடையே பறக்கும் சாலை திட்டத்தை கைவிட, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க, பறக்கும் சாலை அமைக்க வேண்டும்.

அமைச்சர் வேலு: மாநில நெடுஞ்சாலையில், மாமல்லபுரத்தில் ஐந்து சுங்கச்சாவடிகளை, மாநில அரசு அமைத்துள்ளது. மத்திய அரசிடம் சுங்கச்சாவடிகளை குறைக்க பேசி வருகிறோம். மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதி உள்ளோம். தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

தாம்பரம் - செங்கல்பட்டு மேம்பட்ட சாலை அமைக்க வேண்டும் என, மத்திய அரசிடம் கூறி வருகிறோம். ஆனால், மத்திய அரசு வேறு சாலை அமைக்க முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளது. மேம்பட்ட சாலை அமைக்க வேண்டும் எனக்கூறி, நாம் அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us