கல்லுாரி முதலாம் ஆண்டு வகுப்புகள் வரும் 3ல் துவக்க உத்தரவு
கல்லுாரி முதலாம் ஆண்டு வகுப்புகள் வரும் 3ல் துவக்க உத்தரவு
கல்லுாரி முதலாம் ஆண்டு வகுப்புகள் வரும் 3ல் துவக்க உத்தரவு
ADDED : ஜூலை 01, 2024 12:54 AM
சென்னை: இளநிலை பட்டப் படிப்பில் முதலாம் ஆண்டு வகுப்புகளை, நாளை மறுதினம் துவங்க வேண்டும் என, கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில், அரசு கல்லுாரிகளில் 1.08 லட்சம் மாணவர்கள்; பிற கல்லுாரிகளில் 3 லட்சம் மாணவர்கள் என, 4.08 லட்சம் பேர் முதலாம் ஆண்டில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்த மாணவர்களுக்கு, நாளை மறுதினம் வகுப்புகளை துவங்க வேண்டும் என, கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, கல்லுாரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
முதலாம் ஆண்டு மாணவர்களை, பஸ், ரயில்களிலும், கல்லுாரி வளாகங்கள் மற்றும் அதன் வெளிப்பகுதிகளிலும், சீனியர் மாணவர்கள் ராகிங் செய்யாமல், கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும், கல்லுாரிகளை உயர் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.