மாதம் ரூ.21,000 சம்பளம் கேட்டு கொசு ஒழிப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்
மாதம் ரூ.21,000 சம்பளம் கேட்டு கொசு ஒழிப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்
மாதம் ரூ.21,000 சம்பளம் கேட்டு கொசு ஒழிப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 01, 2024 12:56 AM

சென்னை: தினக்கூலியாக சம்பளம் வழங்காமல், மாதம், 21,000 ரூபாய் வழங்க வலியுறுத்தி, டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து, சமூக சமத்துவத்திற்கான டாக்டர் கள் சங்கத்தின் பொதுச்செயலர் ரவீந்திரநாத் கூறியதாவது:
டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் 38,000 பேர், 12 ஆண்டுகளாக தினக்கூலிகளாக பணியாற்றுகின்றனர். கொரோனா காலத்தில் முன்களப் பணியாளர்களாக அனைத்து பணிகளையும் செய்தனர்.
இவர்களுக்கு உள்ளாட்சிகள் சார்பில், 200, 250, 300, 440 ரூபாய் என, வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு விதமான ஊதியம் வழங்கப்படுகிறது.
இவர்கள் சுகாதாரத்துறையில் பணியாற்றினாலும், சுகாதார பணியாளர்களாக அங்கீகரிக்கப்படவில்லை. இதை முறைப்படுத்தி, சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில், மருத்துவ துறையின் வாயிலாக மாதாந்திர ஊதியமாக, 21,000 ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்களப்பணியாளர் சங்க நிர்வாகிகள் ஜெயவேல், சதீஷ், பூமிநாதன், மருத்துவ துறை பணியாளர் கூட்டமைப்பின் மாநில செயலர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.