Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ரூ.5 கோடியாவது வேண்டும்; எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை

ரூ.5 கோடியாவது வேண்டும்; எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை

ரூ.5 கோடியாவது வேண்டும்; எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை

ரூ.5 கோடியாவது வேண்டும்; எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை

ADDED : ஜூன் 23, 2024 06:37 AM


Google News
சென்னை: 'எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை, குறைந்தது 5 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்' என, எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்தனர்.

சட்டசபையில் நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரின்ஸ் பேசும் போது, ''எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை, 3 கோடி ரூபாயில் இருந்து, 10 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். கர்நாடகா, கேரளா மாநிலங்களில், 5 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. எம்.எல்.ஏ.,க்களுக்கு பி.ஏ., நியமிக்கின்றனர். தமிழகத்தில் குறைந்தது 5 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும்,'' என்றார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் பெரியசாமி, ''இதற்கே, 700 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகிறது. முதலில் கருணாநிதி, 25 லட்சம் ரூபாயில் துவக்கினார்,'' என்றார்.

ம.தி.மு.க., - எம்.எல்.ஏ., சதன் திருமலைகுமார், தொகுதி நிதியை 6 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும், பா.ம.க., - எம்.எல்.ஏ., சதாசிவம், 5 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us