அரசியல் பேசிய அமைச்சருக்கு சபாநாயகர் அப்பாவு அறிவுரை
அரசியல் பேசிய அமைச்சருக்கு சபாநாயகர் அப்பாவு அறிவுரை
அரசியல் பேசிய அமைச்சருக்கு சபாநாயகர் அப்பாவு அறிவுரை
ADDED : ஜூன் 23, 2024 06:36 AM
சென்னை : ''மூத்த அமைச்சர்களை பின்பற்றி, சபையில் நாகரிகமாக பேச வேண்டும்,'' என, பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, சபாநாயகர் அப்பாவு அறிவுரை வழங்கினார்.
சட்டசபையில் நேற்று, பால்வளத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது. அதில், அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலுரை வழங்கினார். தன் பேச்சை ஆரம்பிக்கும் போது, அவர் சமீபத்திய லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பாக பேச முயன்றார்.
அப்போது, சபாநாயகர் குறுக்கிட்டு, ''அரசியல் பேசுவதை இங்கு தவிர்க்க வேண்டும்,'' என்றார்.
பின்னர் நடந்த விவாதம்:
மனோ தங்கராஜ்: நாம் அரசியல் கட்சியில் இருக்கிறோம்; எனவே, அரசியலைப் பற்றி பேசுவதற்கு எனக்கு அனுமதி வழங்க வேண்டும்.
சபாநாயகர்: சபைக்கு நாகரிகம் உள்ளது; நாகரிகமாகப் பேச வேண்டும்.
மனோ தங்கராஜ்: நான் நாகரிகமாகத் தான் பேசுவேன்; வரம்பை மீறிப் பேச மாட்டேன்.
சபாநாயகர்: மூத்த அமைச்சர்கள் பலரும் நாகரிகமாகப் பேசுகின்றனர். அவர்களை பின்பற்றி நீங்கள் பேச வேண்டும். மீறிப் பேசினால், நீங்கள் பேசுவது சபைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும். பொதுக்கூட்டத்தில் பேசுவது போல அரசியல் பேசக்கூடாது; சபைக்கு சில நாகரிகம் உள்ளது. அரசின் சாதனைகள், முதல்வரின் அருமை, பெருமைகளை பற்றி பேசுங்கள்.
இவ்வாறு விவாதம் நடந்தது.