Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ஏர்வாடி அருகே பள்ளியில் 2 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு: சக மாணவர் வெறிச்செயல்

ஏர்வாடி அருகே பள்ளியில் 2 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு: சக மாணவர் வெறிச்செயல்

ஏர்வாடி அருகே பள்ளியில் 2 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு: சக மாணவர் வெறிச்செயல்

ஏர்வாடி அருகே பள்ளியில் 2 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு: சக மாணவர் வெறிச்செயல்

ADDED : செப் 26, 2025 02:24 AM


Google News
Latest Tamil News
திருநெல்வேலி:டோனாவூர் அரசு உதவி பெறும் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன் சக மாணவனை அரிவாளால் வெட்டினார். அதனை தடுத்த இன்னொரு மாணவனுக்கும் காயம் ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே டோனாவூரில் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ , கிறிஸ்துவ டயோசீசன் நிர்வகிக்கும் வாக்கர் இருபாலர் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

அங்கு 9ம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர், வகுப்புக்கு பான்பராக் பாக்கெட் கொண்டு வந்துள்ளார். இதனைப் பார்த்த சக மாணவர் மற்ற மாணவர்களிடம் கூறியதால் சர்ச்சை ஏற்பட்டது. இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் வகுப்பில் தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை பள்ளியில் வழிபாடு முடிந்து வகுப்புகளுக்கு செல்லும் போது 9ம் வகுப்பு மாணவர், சக மாணவனின் முதுகில் அரிவாளால் வெட்டினார்.

மாணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதனை தடுத்த இன்னொரு மாணவனுக்கும் கையில் அரிவாள் வெட்டு காயம் ஏற்பட்டது.

அரிவாளால் வெட்டிய மாணவனை பிடித்து ஏர்வாடி போலீசாரிடம் ஆசிரியர்கள் ஒப்படைத்தனர். காயமுற்ற மாணவனை ஏர்வாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதுகில் 6 தையல்கள் போடப்பட்டன. பின்னர் அவர் தங்கியிருக்கும் தனியார் விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பட்டியலின மாணவர் அரிவாளால் வெட்டிய மாணவன் அதே பகுதியைச் சேர்ந்த வடுகச்சிமதில் கிராமத்தை சேர்ந்தவர். வெட்டுப்பட்ட 9ம் வகுப்பு மாணவன் திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவலை சேர்ந்தவர். தந்தை இல்லை. தாயார் கவனித்து வந்தார்.

எனவே களக்காடு அருகே ஊச்சிகுளத்தில் செயல்படும் ஒரு தனியார் டிரஸ்ட் விடுதியில் தங்கி டோனாவூர் பள்ளியில் பயின்று வந்தார். காயம்பட்ட மாணவன் பட்டியல் இனத்தை சேர்ந்தவர். அரிவாளால் வெட்டிய மாணவன் வேறு வகுப்பை சேர்ந்தவர். ஆனால் வெட்டுவதை தடுத்ததால் கையில் காயமுற்ற மாணவனும் வெட்டிய மாணவனின் வகுப்பை சேர்ந்தவர்.

சம்பவம் குறித்து ஏர்வாடி போலீசார் கொலை முயற்சி, பயங்கர ஆயுதத்துடன் தாக்கியது ஆகிய இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து வெட்டிய சிறுவனை திருநெல்வேலியில் உள்ள சிறார் நீதிக் குழுமம் முன்பு நேற்று மாலை ஆஜர் படுத்தினர்.

இந்த சம்பவத்தில் இருவரும் வெவ்வேறு பிரிவினராக இருந்தாலும் போலீசார் ஜாதி பிரிவு வழக்கு பதிவு செய்யவில்லை. இது ஜாதி நோக்கத்துடன் நடக்கவில்லை எனவும் தனிப்பட்ட சம்பவத்தில் நடந்ததால் இதை பெரிது படுத்தாதீர்கள் எனவும் எஸ்.பி. சிலம்பரசன் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

தொடர் சம்பவம்.. திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஜாதி ரீதியான தாக்குதல்கள், மோதல்கள் நடப்பது தொடர்கிறது. ஏற்கனவே நாங்குநேரியில் சின்னதுரை என்ற மாணவர் ஜாதி ரீதியாக தாக்கப்பட்டார். அண்மையில் திருநெல்வேலி ஐ.டி. ஊழியர் கவின் காதல் தகராறில் ஜாதி ரீதியாக ஆணவக் கொலை செய்யப்பட்டார். இம்மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொடர்ந்து ஜாதி மோதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இவற்றை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us