ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி; சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றம்
ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி; சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றம்
ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி; சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றம்
UPDATED : ஜூலை 08, 2024 01:13 PM
ADDED : ஜூலை 08, 2024 12:36 PM

சென்னை: பகுஜன்சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலியாக சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றப்பட்டார்.
தமிழக உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்படுகிறார்.

சந்தீப் ராய் ரத்தோர் காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக மாற்றப்படுகிறார்.
சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,
விமர்சனம்
கடந்த 5ம் தேதி இரவு, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் அம்ஸ்டிராங், வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக, மாநில அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இச்சூழ்நிலையில், சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.