Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ கோவில்களில் இறந்த தலைவர்களுக்கு கொண்டாட்டமா: பொன். மாணிக்கவேல்

கோவில்களில் இறந்த தலைவர்களுக்கு கொண்டாட்டமா: பொன். மாணிக்கவேல்

கோவில்களில் இறந்த தலைவர்களுக்கு கொண்டாட்டமா: பொன். மாணிக்கவேல்

கோவில்களில் இறந்த தலைவர்களுக்கு கொண்டாட்டமா: பொன். மாணிக்கவேல்

Latest Tamil News
திருப்பூர்; ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பொன். மாணிக்கவேல் அளித்த பேட்டி: தமிழகத்தின் பிரதானமாக இருக்கும் ஆயிரக்கணக்கான ஹிந்து கோவில்களில், இறந்த அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்த நாள், ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. மற்ற மதத்தினர், தங்கள் மதம் சார்ந்த ஆலயங்களில், இதுபோன்று கொண்டாட அனுமதிப்பதில்லை.

குறிப்பிட்ட அந்நாளில், கோவில் வங்கி கணக்கிலிருந்து கோடிக்கணக்கான பணத்தை எடுத்து சிறப்பு பூஜை, மதிய விருந்து கொடுக்கின்றனர். இதனால், கோவில்கள் புனித தன்மை கெடுகிறது. கோவிலை கட்சி தலைமையிடமாக மாற்ற ஹிந்துக்கள் விடக்கூடாது.

தமிழகத்தில் உள்ள, ஆறு கோடி ஹிந்துக்களும் ஒன்று சேர்ந்து, ஒரே ஒரு நாள், ஒரு மணி நேரம், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒரே கோவிலில் கூட வேண்டும். பின், பத்து நிமிடம், கோவில்களில் இறந்த அரசியல் தலைவர்கள் பிறந்த நாளை கொண்டாடக்கூடாது என, பிரார்த்தனை செய்ய வேண்டும். தொடர்ச்சியாக, அரசின் இந்த முயற்சியை கைவிட வலியுறுத்த வேண்டும்.இப்படி செய்வதற்கான நாள், நேரம் விரைவில் அறிவிக்கப்படும். இந்த விஷயத்தில், அனைத்து ஹிந்து அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us