Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ அமெரிக்காவில் பணி நீக்கம் 80 சதவீதமாக உயர்வு

அமெரிக்காவில் பணி நீக்கம் 80 சதவீதமாக உயர்வு

அமெரிக்காவில் பணி நீக்கம் 80 சதவீதமாக உயர்வு

அமெரிக்காவில் பணி நீக்கம் 80 சதவீதமாக உயர்வு

ADDED : ஜூன் 28, 2025 01:38 AM


Google News
Latest Tamil News
வாஷிங்டன்: அமெரிக்காவில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரையிலான ஐந்து மாதங்களில், ஏழு லட்சம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இது, முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 80 சதவீதம் அதிகம்.

அமெரிக்காவில் கொரோனாவுக்கு பின் பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது. இதனால் ஆண்டுதோறும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன.

இதுகுறித்து, 'சேலஞ்சர், கிரே மற்றும் கிறிஸ்துமஸ்' என்ற அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தை கண்காணிப்பு நிறுவனத்தின் துணை தலைவர் ஆண்ட்ரூ கூறுகையில், ''அமெரிக்காவில் நிலவும் தற்போதைய சூழலால் நுகர்வோர் செலவிடுவது குறைந்துள்ளது, நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது, வரிகளில் மாற்றங்கள் ஆகியவை உள்ளன.

''இந்த நிலைமைகளால் நிறுவனங்களின் வருவாய் குறைகிறது, ஆட்சேர்ப்பை தாமதப்படுத்துகின்றனர், பணிநீக்கங்களை அறிவிக்கின்றனர்,'' என்றார்.

இந்தாண்டு பணிநீக்கங்களில் தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துறையில் இதுவரை 74,716 பேர் வேலை இழந்துள்ளனர்.

இது, 2024ல் 55,207 ஆக இருந்தது. 'அமேசான், கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட்' போன்ற நுாற்றுக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான பணியிடங்களை குறைத்து உள்ளன.

இவை ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு முதலீடுகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றன.

எனவே, சேவை துறையில், 44,273 பேர்; சில்லறை வர்த்தக துறையில், 75,802 பேர்; அரசு துறையில் மிகப்பெரிய அளவாக, 2,84,000 பேர்; ஊடக துறையில், 1,820 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

அரசு துறையில் பெரிய அளவில் ஆட்க்குறைப்புக்கு காரணமாக தொழிலதிபர் எலான் மஸ்க் முன்னாள் தலைவராக இருந்த சிறந்த நிர்வாகத்துக்கான துறையின் செலவு குறைப்பே காரணம் என கூறப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us