Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய குருபெயர்ச்சி பலன்கள்

rasi

மேஷம்குருபகவான் 9ம் இடமான தனுசு ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம். இதுவரை அவரால் பட்ட இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை ஏற்படும்.  தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. இவை அனைத்தும் குருவால் கிடைக்கும் நற்பலன்கள். இது தவிர குருவின் 9ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளதால் நன்மை அதிகரிக்கும். குருபகவான் 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை அதிசாரம் பெற்று மகர ராசியில் இருக்கிறார். அவரால் நற்பலன் கிடைக்காது.

இனி முக்கிய கிரகங்களை அடிப்படையாக கொண்டு  பொதுவான பலனைக் காணலாம். மனதில் உற்சாகம் பிறக்கும். மகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப் புழக்கம் அதிகரிக்கும். இது தவிர குருவின் 9ம் இடத்துப்பார்வை மூலம் பொருளாதார வளம் கூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண்களால் மேன்மை கிடைக்கும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை செலவு அதிகரிக்கும். முயற்சியில் தடைகள் வரலாம்.  உறவினர் வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை.

தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்.  வியாபார விஷயமாக அடிக்கடி வெளியூர்,  வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட வியாபாரம் சிறப்பாக இருக்கும். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். புதிய தொழில் நல்ல லாபத்தை தரும். பகைவர் தொல்லை, அரசு வகையில்  வந்த  அனுகூலமற்ற போக்கு மறையும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை பணவிரயம் ஆகலாம். புதிய வியாபார முயற்சியை தவிர்ப்பது நல்லது.  வங்கி கடன் பெறுவதில் தடங்கல் வரலாம். திடீர் சோதனைக்கு ஆளாகலாம். வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். 2020 ஆகஸ்ட் 31க்கு பிறகு ராகுவால் பணநெருக்கடி, பொருளாதார இழப்பு ஏற்படலாம்.

பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு உண்டு. சக ஊழியர்கள் ஒத்துழைப்பர். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். இடமாற்ற பீதி மறையும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை வீண்அலைச்சல் ஏற்படலாம். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். திடீர் இடமாற்றம் ஏற்படலாம் பணியிடத்தில் பொறுமை தேவை. பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். எழுத்தாளர்கள் வாசகர் மத்தியில் புகழ் பெறுவர். வக்கீல்கள் தொழிலில் சிறந்து விளங்குவர். சிறுதொழில் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்துவர். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். அரசியல்வாதிகள் நல்ல வசதியுடன் இருப்பர். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை விடாமுயற்சி தேவைப்படும்.

மாணவர்களுக்கு இது நன்மை தரும் காலகட்டம். இதை பயன்படுத்தினால் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணலாம். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை நட்பு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.  விவசாயிகள் நவீன முறையைக் கையாண்டு அதிக லாபம் காண்பர். மஞ்சள், கரும்பு, எள், பனை போன்றவை மூலம் அதிக மகசூல் கிடைக்கும்.  கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க யோகமுண்டு.  வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை விவசாயத்தில்  அதிக முதலீடு எதிலும் செய்ய வேண்டாம்.

பெண்களுக்கு குடும்ப பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். உங்களால் குடும்பம் சிறக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். தோழிகளின் உதவி கிடைக்கும். பிறந்த வீட்டினரின் ஆதரவு உண்டு. திருமணம் போன்ற சுபவிஷய பேச்சு நடக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். அவர்களுக்கு புதிய பதவியும் தேடி வரும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை விழிப்புடன் செயல்படவும்.

பரிகாரம்:
*   பவுர்ணமியன்று அம்மனுக்கு நெய்தீபம்
*   சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல்
*   வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us