சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி
ADDED : 200 days ago
சூர்யாவுடன் இணைந்து கருப்பு என்ற படத்தில் நடித்திருக்கும் திரிஷா, அதையடுத்து தெலுங்கில் சிரஞ்சீவி உடன் விஸ்வாம்பரா, மலையாளத்தில் மோகன்லால் உடன் ராம் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அவரை விஜயுடன் இணைத்து பேசிய விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து அரசியலுக்கு அப்பாற்பட்ட என்னைப்பற்றி யாரும் தவறான கருத்து சொல்ல வேண்டாம் என்று தனது வழக்கறிஞர் மூலம் ஒரு அறிக்கை வெளியிட்டார் திரிஷா. இப்படியான நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்திருக்கிறார். அங்கு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, ‛‛சிறந்த நாள், இன்னும் உணர்கிறேன்'' என பதிவு போட்டுள்ளார்.