ஏப்ரல் 10ல் 4 படங்கள் ரிலீஸ்
பள்ளிகளுக்கான தேர்வுகள் அடுத்த வார திங்கள் கிழமை ஏப்ரல் 13ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின் கோடை விடுமுறை ஆரம்பமாகிவிடும். ஒரு பக்கம் தமிழக சட்டசபைத் தேர்தல், மறுபக்கம் ஐபிஎல் போட்டிகள் என இருந்தாலும் வாராவாரம் படங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது.
கடந்த வாரம் ஏப்ரல் 3ம் தேதி “கார்மேனி செல்வம், காளிதாஸ் 2, லீடர், மரகதமலை, நீளிரா” ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்த வாரம் ஏப்ரல் 10ம் தேதி, “கெஸ்ட், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, மனிதன் தெய்வமாகலாம், டிஎன் 2026” ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
இந்த வருடத்தில் வெளியான சில சிறிய பட்ஜெட் படங்கள் தான் அனைவருக்கும் லாபத்தைத் தந்த படங்களாக அமைந்தன. இந்த வாரம் வெளியாக உள்ள படங்களில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படம் மீது எதிர்பார்ப்பு உள்ளது. அவருடைய முந்தைய இரண்டு படங்களான 'டிராகன், டியூட்' 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துக் கொடுத்தது. அது போல இந்தப் படத்தின் வசூலும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.