உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை : செல்வராகவன்

ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை : செல்வராகவன்

செல்வராகவன் கதை நாயகனாக நடித்துள்ள படம் 'மனிதன் தெய்வமாகலாம்'. வருகிற 10ம் தேதி வெளியாகிறது. டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் இப்படத்தில் குஷி ரவி நாயகியாகவும், மைம் கோபி, சவுசல்யா, ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். வியம் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் விஜயா சதீஷ் தயாரித்துள்ளார்.

படம் குறித்து செல்வராகவன் கூறியிருப்பதாவது : ‛‛ஒரு கதையை தேர்வு செய்யும்போது, குறிப்பிட்ட காட்சிகள் என்னை ஈர்க்க வேண்டும். ரசிகர்களுக்கும் அது பிடிக்க வேண்டும் என பார்ப்பேன். அப்படித்தான் இந்த படத்தையும் தேர்வு செய்தேன். கதைதான் எனக்கு முதலில் பிடிக்க வேண்டும்.

கதையின் நாயகனாக என்னை நடிக்கச் சொல்லி அருண் மாதேஸ்வரன் 'சாணிக்காயிதம்' படத்தில் நடிக்க வைத்தார். மோகன்ஜி 'பகாசுரன்' படத்தில் நடிக்க வைத்தார். அதேபோல்தான் டென்னிஸ் மஞ்சுநாத்தும் இதில் நடிக்க வைத்துள்ளார், தொடர்ந்து ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றில்லை. காரணம், நான் எதையும் திட்டமிட்டு செய்வதில்லை. வாழ்க்கையை அதன்போக்கில் சென்று வாழ்கிறேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !