உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண்

விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் தற்போது ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகவும் உள்ளார். மக்கள் பணியாற்றிக் கொண்டே சினிமாவிலும் பயணிக்கிறார். இவரைப்போலவே தமிழில் நடிகர் விஜய், ‛தமிழக வெற்றிக் கழகம்' கட்சியை துவங்கி, இந்த தேர்தலில் தனியாக களம் காண்கிறார்.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பவன் கல்யாணிடம் ‛‛விஜயின் அரசியல் பார்வை மற்றும் அவருக்கு ஏதேனும் அறிவுரை எதுவும் வழங்கினீர்களா'' என்பது குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‛‛விஜய் என்றில்லை பொதுவாகவே யாருக்கும் நான் அறிவுரை சொல்வதில்லை. அது என் பிள்ளைகளாக இருந்தாலும் கூட சொல்ல மாட்டேன். காரணம் ஒவ்வொருவருக்கும் சுயமாக யோசிக்கும் திறன் உள்ளது. அப்படித்தான் விஜய்க்கும். அவர் பெரிய ஸ்டார் நடிகர், அவருக்கு நான் அறிவுரை சொல்ல தேவையில்லை. ஜனநாயக நாட்டில் மக்களுக்கு சேவை செய்ய எந்த குடிமகனும் அரசியலுக்கு வரலாம், அரசியல் கட்சி துவங்கலாம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Senthoora, Sydney
2026-04-15 07:16:43

அரசியல் அறிவு இல்லையே?