156 நாளில் எடுக்கப்பட்ட துல்கர் படம்
துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் “ஐ அம் கேம்'. இந்தப் படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். கதையை ஷஹாபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து எழுதியுள்ளனர். நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இந்தப் படம், துல்கர் சல்மானின் 40வது திரைப்படமாகும்.
இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது.
இது குறித்து தயாரிப்பு நிறுவனம் கூறியதாவது : படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த படம் சுமார் 11 மாத அளவில் 156 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பெரிய பட்ஜெட்டில் ஆக்ஷன் த்ரில்லர் படமாக தயாராகி வருகிறது. வருகிற ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.