உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்'

ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்'


2010ல் 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். அதன்பின் 'பொறியாளர், வில் அம்பு' படங்களில் நடித்தாலும் அவர் பங்கேற்ற 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மற்றும் அதனை தொடர்ந்து நடித்த 'பியார் பிரேமா காதல்' படம் தான் அவரை வெளியுலகிற்கு வெளிச்சம் காட்டியது.

பிக்பாஸில் இருந்த ரைசா வில்சனுடன் 'பியார் பிரேமா காதல்' படத்தில் ஜோடியாக நடித்ததன் மூலம் காதல் கிசுகிசுவில் சிக்கிய ஹரிஷ் கல்யாண், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 2022ல் நர்மதா என்பவரை திருமணம் செய்தார். அதன்பிறகு அவர் நடித்த 'பார்க்கிங், லப்பர் பந்து, டீசல்' படங்கள் வெற்றிப்பெற்றன.

இந்த நிலையில் கடந்த மார்ச் 2ம் தேதி ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு இன்று (ஏப்.,14) தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 'கிரியா ஹரிஷ்' எனப் பெயர் சூட்டியுள்ளனர். இத்தகவலை ஹரிஷ் கல்யாண் பகிர்ந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !