துஷாரா விஜயன், அப்பாஸின் ‛எக்சாம்' வெப் தொடர் மே 15ல் ரிலீஸ்
இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் இயக்குனர் சற்குணம் கடந்த சில வருடங்களாக ' எக்சாம் தி சிஸ்டம் எக்ஸ்போஸ்ட்' என்கிற புதிய வெப் தொடரை இயக்கி வருகிறார். இதில் துஷாரா விஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து அப்பாஸ், அதிதி பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
போட்டித் தேர்வுகளின் அழுத்தம் நிறைந்த சூழலை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமா, உணர்ச்சி மிகுந்த மற்றும் பதட்டம் நிறைந்த கதையாக உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த சில மாதங்களாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தன.
தற்போது இந்த வெப் தொடர் வருகின்ற மே 15ந் தேதி முதல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகும். இந்த சீரிஸ் தமிழில் வெளியாவதுடன், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப் டைட்டில்களுடன் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.