உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராக்கா படத்தில் இணைந்த மின்னல் முரளி பட நடிகை

ராக்கா படத்தில் இணைந்த மின்னல் முரளி பட நடிகை

நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குனர் அட்லி கூட்டணியில் உருவாகி வரும் படம் 'ராக்கா'. சூப்பர் ஹீரோ கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 600 கோடி என்கிறார்கள். சமீபத்தில் முதல்பார்வை போஸ்டர் வெளியானது. அதில் அல்லு அர்ஜுனின் தோற்றம் மனிதன், மிருகம் கலந்து இருந்தது. இதில் கதாநாயகிகளாக தீபிகா படுகோன், மிருணாள் தாகூர் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பலகட்டமாக ஹைதராபாத், மும்பையில் அரங்கம் அமைத்து நடத்தி வருகின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, ஜிம் சார்ப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தற்போது இவர்களுடன் மலையாளத்தில் வெளிவந்த மின்னல் முரளி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான பெமினா ஜார்ஜும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !